''தேவை'' தேவைகள் இது என இன்று இருந்தாலும்! தேவைகள்...
''தேவை''
தேவைகள் இது என
இன்று இருந்தாலும்!
தேவைகள் அது
மறுநாளிள் மாறும்!
தேவைகள் நிறந்தரமல்ல!
உன் தேவைகள் என்பது
அடிக்கடி மாறும்! மனம்மாறும்!
உன் தேவைகளே
உன் வாழ்க்கையின்
அடுத்த கட்டத்திற்கு
உனைக் கொண்டு செல்லும்;
தேவைகளுக்கு அல்லல்படும் மனிதரும் உண்டு..
ஆசைகளுக்கு அலையும்
மனிதரும் உண்டு..
தேவை வேறு! ஆசை வேறு!
-தினகரன் பொன்கதிர்