எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்றுமே இல்லை துன்பம்... மெல்லிய மலரின் மென்மை மேவிடு...

என்றுமே இல்லை துன்பம்...

மெல்லிய மலரின் மென்மை
மேவிடு இதயம் வாட்ட
அல்லியின் அழகுக் கண்கள்
அணைத்திடு அன்பைக் காட்ட
சொல்லிடை மதுவைச் சிந்து
சுந்தர இதழ்கள் தாக்க
வல்லியின் வரவில் கண்டேன்
வானுறை இன்பம் யாவும்

பொங்கிடு அலையைப் போல
பூத்திடு சொல்லால் போர்த்தி
தங்கிடா ஆறாய் ஓடி
தழுவிடு தன்மை தாங்கி
மங்கிடா மணியைப் போல
மாசிலா நெஞ்சம் கொண்ட
இங்கிவள் இருந்தால் இன்பம்
என்றுமே இல்லை துன்பம்

அன்புடன்... இளம்... 12 04 14

நாள் : 25-Jul-14, 1:19 pm

மேலே