பயணம் பயணம் பயணம் பயணம் பத்து மாத சித்திரமொன்று...
பயணம்
பயணம் பயணம் பயணம்
பத்து மாத சித்திரமொன்று ஜனனம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
ஆரம்பம் பள்ளிக்கு பயணம்
பின்பு அடுத்தது ஆசையின் பயணம்
இளம் காதலர் கண்களில் பயணம்
அந்த கலக்கத்தில் கண்ணீரில் பயணம்
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
புகை வண்டி ஓட்டிட ஒருவன்
அது போகின்ற வழி சொல்ல ஒருவன்
அந்த இருவரை நம்பிய மனிதன்
அவன் இடையினில் நினைப்பவன் இறைவன்
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
சந்திப்பு வருவது கண்டு
பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு
அவர் சொந்தங்களாவதும் உண்டு
அது தொடர் கதை ஆவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
-கவிஞர் வாலி-