எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழா,..,மச்சி , மாமே, மாப்பிள்ளே, மாம்ஸ், கூட்டாளி ,...

தோழா,..,மச்சி , மாமே, மாப்பிள்ளே, மாம்ஸ்,
கூட்டாளி , காம்ரேட், தோஸ்து,
"தோன்|" , ஹாய், பிரன்டே, ஆள்ளே,
சிநேகிதா,,மித்ரா........
இவையாவும் ஒரு பொருட் பன்மொழி -
உலகளாவிய நன்மொழி -
நண்பன் எனும் இன்மொழி !!!

யோசிக்காமல் நேசிப்பது
நட்பில் மட்டும்தான் -
நேசித்ததை யோசிக்காமல் ,
பாசம் பூசி இ(ற)ருக்கும்வரை
காப்பதும் நட்பில் மட்டுமே!

வயதுரேகையால் வளைக்கப்பட்ட
பூகோள உருண்டை அல்ல நட்பு!
நாலு வேலிக்குள் நட்டுவைத்த
பூமரம் அல்ல நட்பு -
இ(எ)ன்றும் உயிர்த்தெழும் போனிக்ஸ் அது!!


நட்பு,
இன்ப வாழ்வின்
சந்தோஷ பாட்டு
துன்ப இருட்டினை
விரட்டும் மகிழொளிக் கீற்று

ஒற்றுமையை ஓதிவரும்
ஓங்கார உல்லாச கீதம்
பற்று பற்று என
பற்றவைக்கும் அதிசய தீபம்

சிரம சிலந்திவலை
நம்மைப் பிணைக்கும்போது
உதவியின் பொருள் விளக்கும்
நவீன வேதம்

எவருக்கும் அவர்தம்
வளர்ச்சியின் கண்ணாடி


(தளத்தின் கவர்ச்சி படங்கள் நீக்கி நட்பு பாராட்டுவோம், தோழமைகளே..!!! )

பதிவு : agan
நாள் : 3-Aug-14, 12:29 pm

மேலே