எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வான்பார்த்துப் படுத்திருந்த நிலச்சூரியனா இன்று மானென பழகுவது நடை..?...

வான்பார்த்துப் படுத்திருந்த நிலச்சூரியனா இன்று
மானென பழகுவது நடை..?

ராகமும் கீதமும் நடையில் கூட்டு
வேகமது ஊறு உனக்கு..

நடைப்பழகு தென்றலாய் நளினமாய் நன்று
மடை திறந்த வெள்ளம் ஊறு...

இப்படி அப்படி நடைப்பழகு -அன்றியும்
தப்படி தவிர். நலம்.

மோதும் பொருள் வழியிலுண்டு காண்
ஊது வழிக்கு தமிழால் .

பாதம் நோகுமுனக்கு நடையில் -மலர்ப்
பாதை என் நெஞ்சு.

வசீகரிக்கும் வளைவு நடை தவிர்
பரிகசிக்கும் பாதை தீது.

நாணலாய் நடைப்பழகு நன்று என்றும்
கோணல் அடி அழி.








பதிவு : agan
நாள் : 6-Aug-14, 8:26 am

மேலே