எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்கான உன் நியாய தராசு... அனைவருக்கும் விற்கப்படும் உன்...

எனக்கான உன் நியாய தராசு...

அனைவருக்கும் விற்கப்படும் உன் வியாபாரப் பொருட்கள்
எனக்கு மட்டும் மறுக்கப்படுகிறது....

உன் கலாச்சாலையின் வாயிற் படிகளில்
என் அடையாளம் மட்டும் கூறு போட்டு விசாரிக்கப்படுகிறது...

உன் காவற்காரர்களின் விசாரணையின் முடிவில்
என் நியாயமான சான்றிதழ்கள், போலியெனெ அவமதிக்கப் படுகின்றன...

உன் கலாச்சாலையில் நுழைய எனக்கு மட்டுமே
அங்கீகாரம் தேவைப் படுகிறது...

உன் முற்றத்தில் என் அங்கீகாரத்திர்கான என் அனைத்து ஆவணங்களும் போலியென கேலி செய்யப்படுகின்றன…!!!

உன் கலாச்சாலையின் காவலர்களால் என் அனைத்து கோரிக்கைகளும்
இரக்கமும், நியாயமும் இல்லாமல் நிராகரிக்கப் படுகின்றன...

நியாயத்திற்கும், இரக்கத்திற்கும், ஒழுக்கத்திற்கும் கட்டுப்பட்டிருந்த நீ
இன்று கண்ணாடி சுவரின் மறுபுறமிருந்து,
என்மீதானா அவமான தாக்குதல்களை
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்...!!!

உன் வல்லூறு என் நேச குஞ்சுகளை
கபளீகரம் செய்துக் கொண்டிருக்கிறது...
நீ புறாவாய் மீண்டும் கரு தரிப்பது எப்போது?

மன்னிப்பு தேவதையாய் நான் நினைப்பவளே...
தூசு தட்டியும், துறுப் பிடித்தும் இருக்கிறது...
எனக்கான உன் நியாய தராசு...

பதிவு : Jay Mo
நாள் : 9-Aug-14, 9:33 pm

மேலே