எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அஞ்சான் பட கதை எங்கேயோ கேட்ட கதை மாதிரி...

அஞ்சான் பட கதை எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்கே

ஒரு புதிய படம் வெளியாகும் போது அந்தப் படத்தின் கதை என்னவென்று ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றால் அந்த ஆர்வம் இன்னும் அதிகமாக இருக்கும். இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள 'அஞ்சான்' படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரை வைத்தே படத்தின் கதை இதுதான் என்று சிலர் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அது பற்றிய தகவலை நாமும் திரட்டிய போது நமக்குக் கிடைத்த 'அஞ்சான்' கதை இதோ.

சூர்யா, வித்யுத் ஜமால் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மும்பையை ஆட்டிப் படைக்கும் ரவுடிகள். இருவரும் சேர்ந்தாலே மும்பையில் உள்ளவர்களுக்கு கதி கலங்குமாம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவர்களை கொலை செய்யத் துடிக்கிறார்கள். அவர்களால் வித்யுத் ஜமால் கொல்லப்பட சூர்யா காணாமல் போய் விடுகிறார். அதன் பின் சூர்யாவைத் தேடி அவருடைய தம்பியான இன்னொரு சூர்யா மும்பைக்கு வருகிறார். தம்பி சூர்யா, அண்ணன் சூர்யாவைக் கண்டுபிடித்தாரா, உண்மையிலேயே அண்ணன் சூர்யா காணாமல் போனாரா, அல்லது அவர்தான் தம்பி போல மீண்டும் வந்து வித்யுத்தைக் கொன்றவர்களைப் பழி வாங்குகிறாரா என்பதுதான் படத்தின் மீதி கதையாம்.

அட...'எங்கேயோ கேட்ட கதை' மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா...?!

நாள் : 13-Aug-14, 6:13 pm

மேலே