எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து சித்தர்களும், வானம்படிகளும், உலக கவிஞர்களும் அவர்களின் முன்னோடிகளும்...

எழுத்து சித்தர்களும், வானம்படிகளும், உலக கவிஞர்களும் அவர்களின் முன்னோடிகளும் எழுதாத சாசனம் அல்லது பிரகடனம்.

இதோ ஜின்னா என்ற அபூர்வ கவியிடமிருந்து.

என்னைப் பற்றி....
-------------------------
கவிதைக்காக பிறந்து கணினி துறையில் வேலை பார்க்கும் ஒரு சராசரி தமிழன்.

நான் எழுதிய / எழுதும் கவிதைகளைப் பற்றி.....
---------------------------------------------------------------------
என் உணர்ச்சி நதியின் காகித ஓடங்கள் .

என் இளமைக் காலங்களின் ஏக்கப் பெருமுச்சுகள் .

என் தனிமை தவத்தின் தத்துவ வரங்கள் .

முடியாது ஏன தெரிந்தபோதும் உலகத்தோடு மீண்டும் மீண்டும் மோதிப்பார்த்த என் கவிதை ஏன்னும் கஜினிமுகமதுகள் .

என் கவலைத் தோட்டத்துக் கண்ணீர்ப் பூக்கள் .

ஆரம்பப் புள்ளி ஆசையை மறக்க முடிவுப் புள்ளியான மரணத்தைத் தேடி ஓட நினைக்கும் மூடச்சிறுவனின் முறிந்த சிறகுகள் .

என் பிடிவாதத்திற்குள்ளான பிரசவ வேதனைகள் .

இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் மனிதர்களை நம்ப முடியவில்லையே எனத் துடித்துக் கொண்டிருக்கும் என் ஊமை இதயத்தின் ஓசைகள் .

என் கடலுக்கு நான் கட்டிய தாஜ்மகால்கள் .

ஒரு சிலரின் காதல் மரணத்திற்கு நான் எழுதி வைத்த கல்லறை வாசகங்கள் .

அழகாகச் சொன்னால் அத்தனையும் காகித மொழிகள்
ஆழமாகச் சொன்னால் அத்தனையும் கவிதைகள் .

கவிதைகளுக்குள்ளே .......
---------------------------------------
என்னை நானே சில சமயங்களில் தேடி அலைந்திருக்கிறேன் .

எனக்கு வியப்பாக இருந்ததையெல்லாம் என் விரலசைவில் கொண்டுவர முயன்றிருக்கிறேன் .

சில கலவரங்களால் காயப்பட்டிருக்கிறேன் .

சில கொடுமைகளால் கண்ணிர் விட்டிருக்கிறேன் .

மனிதர்களைப் பற்றி மோசமாக ஏழுதுகிறேன் . காரணம் சிரித்துக் கொண்டிருந்த பூமிக்கு முதன்முதலில் கண்ணிர் விட கற்றுக் கொடுத்தவன் மனிதன்தான் .

இங்கே ......

இயற்கையை நேசிக்கத் தெரிந்த எனக்கு மனிதர்களை நேசிக்கத் தெரியவில்லை என்பதில் சிறு வருத்தம். ஆனால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மனிதர்களைப் பார்த்து தெரிந்துகொண்டதைவிட இயற்கையைப் பார்த்து தெரிந்து கொண்டதில் ஒரு மகிழ்ச்சி .

இதில் ....

கவிதைகளைப் பார்த்தால் நானிருப்பேன் ....

கவிதைகளுக்குள் பார்த்தால் நீங்கள் இருப்பீர்கள் ....

*******

இனி
இவன்
கவிதைகளில்
நாம்
இருக்கவேண்டும்.

-கவித்தாசபாபதி

நாள் : 15-Aug-14, 1:47 pm

மேலே