எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓம் நமோ நாராயணா ஆதியும்அந்த முமானவன் அதிரூப சுந்தரனவன்...

ஓம் நமோ நாராயணா

ஆதியும்அந்த முமானவன்
அதிரூப சுந்தரனவன்
கதியென்று சரணடைந்தால்
கற்பகத்தரு தருபவன்

புல்லானவன் பூச்சியானவன்
கல்லானவன் கதையானவன்
காற்றானவன் நீரானவன்
சாத்தானும் அவனானவன்

நல்லதும் அவனாகி
தீயதும் அவனாகி
நற்றத்துவம் சொல்வானவன்
கொல்லவும் செப்பிடும்
தள்ளவும் செப்பிடும்
தத்துவக்கீ தைதந்தானவன்

ஆயர்பாடியில் பிறந்து
ஆநிரைகள் மேய்த்து
அரவப்படுக் கைகொண்டானவன்
அந்தகுறுமுனி போல்வந்து
அரசன்பலி கொன்று
அமைதி நாட்டினானவன்

அவதாரம் பத்து கொண்டானவன்
அந்த கல்கியும் அவனானவன்
இவனாமம் எல்லோரும் சொன்னாலும்
சிவநாமம் எப்போதும் மறக்காதவன்

கள்ளனும் அவனே
குள்ளனும் அவனே
கண்ணனும் அவனே
அண்ணலும் அவனே

பாதம் பற்றிடு
பாவம் போக்கிடுவான்
நாளும் பற்றிடு
நாராயணன் தேற்றிடுவான்.

சுசீந்திரன் .


நாள் : 17-Aug-14, 11:56 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே