எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அறிவியலின் வலிமை அறிவியல் தாயே, இரவில் இருளில் இருந்த...

அறிவியலின் வலிமை


அறிவியல் தாயே,
இரவில் இருளில் இருந்த மானுடம்
ஒளிப் பெற்று உருப் பெற்றதும்
உன்னால் தான்,

இலையில் ஒழிந்த மனித உடல்
மிடுக்காய் உடைகள் கண்டதும்
உன்னால் தான்,

கால்கள் தேய நடந்தவனுக்கு
காளை வண்டி கிடைத்ததுவும்
உன்னால் தான்,

காலம் மாற காளை போய்
காரில் சொகுசாய் செல்வதுவும்
உன்னால் தான்,

இளைப்பாற மரம் தேடி
அலைந்தவன் இன்று ஏசி வேண்டுவதும்
உன்னால் தான்,

தொலைதூரம் ஆனாலும்
முகம் பார்த்து பேசி மகிழ்வதும்
உன்னால் தான்,

கையினிலே காலம் காட்டும்
கடிகாரம் வந்ததுவும்
உன்னால் தான்,

நான் கருவான போது
என் தாய்க்கு என்னை காட்சியளித்ததுவும்
உன்னால் தான்,

நான் உருவான போது
இவ்வுலகிற்கு என் பாலினம் சொன்னதுவும்
உன்னால் தான்,

பண்டமாற்றம் செய்து வந்த நாங்கள்
இன்று இதய மாற்றம் செய்வதுவும்
உன்னால் தான்,

ஏழு காண்ட செய்தியினை
ஏழு அங்குல திரையினிலே காண்பதுவும்
உன்னால் தான்,

மனிதனின் காலனியாதிக்கம் இல்லாத
அமேசன் காட்டை படமாய் பார்ப்பதுவும்
உன்னால் தான் ,

இவற்றையெல்லாம் எண்ணி
நான் அகம் மகிழ்ந்த போதிலும்,

இரண்டு நகரம் இருந்த இடம் தெரியாமல்
சிதறி போனதுவும்
உன்னால் தான்,

இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டு
பல்லுயிர் மாண்டதுவும்
உன்னால் தான்,

வியட்நாம் போரில் விமானம்
குண்டு மலை பொழிந்ததுவும்
உன்னால் தான்,

போபாலில் விஷவாயு கசிந்து
மானுடம் பலர் மாண்டதுவும்
உன்னால் தான்,

சக்கர வாகனம் சலிக்காமல்
நச்சு புகையை உமிழ்வதுவும்
உன்னால் தான்,

புவித்தோழன் ஓசோன்
நச்சு புகையால் ஒட்டையாவதுவும்
உன்னால் தான்,

மரங்கள் பல அழிந்து
மாடிகள் சில எழுவதுவும்
உன்னால் தான்,

காடுகள் பல மறைந்து பருவ மழை
பொய்த்துபோவதுவும்
உன்னால் தான்,

மாற்றாய் ஆழ்துளை கிணறுகள் பல
நீரை உறிஞ்சுவதுவும்
உன்னால் தான்,

இயற்கை உரத்தால் செழித்த மண்
செயலிழப்பதுவும்
உன்னால் தான்,

வேதி விளைச்சலால் என் தாய் மார்பில்
விஷப்பால் வடிவதுவும்
உன்னால் தான்,

வெப்ப மயமானதால் பனிமலை உருகி
கடல் ஊருக்குள் புகுந்ததுவும்
உன்னால் தான்,

கப்பல்கள் கசிந்த எண்ணையினால்
கடல் உயிர் அழிந்ததுவும்
உன்னால் தான்,

மட்காத குப்பை பெருகியதால்
மண் மலடானதுவும்
உன்னால் தான்,

கரியமில வாயுவினால் காற்று
கலப்படமானதும்
உன்னால் தான்,

ஆக, அறிவியல் தாயே ,
ஆக்கமும் நீயே, அழிவும் நீயே,
ஆக்கத்தை பயன்படுத்து,அழிவினை தூரவிரட்டு
என
உன் வலிமையினை அறைக்கூவல் விடுப்பாயோ,,,,,,,,,,,….?

பதிவு : gurumoorthy m
நாள் : 7-Dec-13, 10:32 pm

மேலே