கண்கள் நீர் மழை பொழிய புண்கள் ரத்த துளி...
கண்கள் நீர் மழை பொழிய
புண்கள் ரத்த துளி சொறிய
என் பண் சொற்கள் தொடர் புரிகின்றது
குழந்தைகளை நோக்கி கூர்மையான குண்டுகள்
தூங்கும் நேரத்தில் சிரசு ஆனது துண்டுகள்
வாழ தடம் தேடும் மழலை வண்டுகள்
சொந்த மண் தான் எந்தன் சொர்க்கம்
வாழா வெட்டி ஆகிவிட்ட எங்கள் வர்க்கம்
உயிரில்ல ஜனத்துக்கும் எம் கதை கேட்க வேர்க்கும்.
பள்ளிகளில் பல்லாங்குழி ஆடவா குழி தோண்டுகிறாய்
வெள்ளி நிற புகை போட்டு குளிர் காய்கிறாய்
கள்ளி பூவையும் கதிரவன் காட்டமல் கரித்துவிடுகிறாய்
கரம் கொடுங்கள்!! எங்கள் குரல் கேட்க..
கூக்குரல் அல்ல!! எங்கள் குழந்தைகளும் மண்ணில் மருக அல்ல!
பருக தண்ணீர் இல்ல... !!! இரு விழி கொண்டு பார் இஸ்ரேல் !!!
நாசா......... கவலையுடன் காஸா.!!!