வித்தியாசமான தேசம்......... உயர்ந்த ஞானம் தொட்டது இந்தியா, அதிக...
வித்தியாசமான தேசம்.........
உயர்ந்த ஞானம் தொட்டது இந்தியா,
அதிக மூடநம்பிக்கை கொண்டதும் அதுவேதான்.
வறுமையில் வாடுவோர் அதிகம் உள்ளதும் இந்தியா;
வெளிநாடுகளில் அதிகப் பணம் பதுக்கி வைத்திருப்பதும் அதுவேதான்.
தனி மனிதனுக்கு நிறைய நீதி சொன்னதும் இந்தியா;
ஊழல் என்பதை ஒரு வாழ்க்கை முறை என்று பழக்கி வைத்திருப்பதும் இந்தியா.
இந்து - பௌத்தம்- சமணம் என்ற முப்பெரு மதங்களை ஈன்று கொடுத்ததும் இந்தியா; மதசார்பற்ற தேசம் என்று மார் தட்டுவதும் இந்தியா.
ஒழுக்கம் பற்றி அதிகம் வலியுறுத்தியதும் இந்தியா;
எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருப்பதும் இந்தியா
வல்லரசாக துடிப்பதும் இந்தியாதான்
விவசாயி தற்கொலை செய்துகொள்வதும் இந்த இந்தியாவில்தான்
-வைரமுத்து ( மூன்றாம் உலகப்போர்)