எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கம்பனை பற்றி என் நண்பர்களுக்கு...

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கம்பனை பற்றி என் நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்புவேன் ( நான் "கடவுள் " கருத்து அற்றவன் .அனால் கம்பனை பிடிக்கும் . தமிழுக்காக . அவனும் ராமனை கடவுளாக பார்க்க வில்லை .)

அவன் ராமனை பற்றி சிறப்பாக எழுதியதை விட இராவணன் , பரதன் , வாலி , கும்ப கர்ணன் , அனுமன் , இலக்குவன் போன்றோரை மிக சிறப்பாக எழுதி இருப்பான் .

அதிலும்
" வாலிவதம் " அது ஒரு classic .வாலி ராமனை கேட்கும் கேள்விகள் அத்தனையும் கம்பன் கேட்டவை .( அந்த வானர தலைவனுக்காக )

அதிலிருந்து சில துளிகள் .

"தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான்"

விளக்கம் -
வாலி பேசுகிறான் .உனக்கு உன் சகோதரர்கள் தான் முக்கியம் . நீ அவர்களை நேசிப்பது உண்மை எனில் , இரண்டு சகோதரர் சண்டைக்குள் வந்து ஒருவனை எப்படி கொல்லலாம் ? "அருளின் பிறப்பிடமே" என்று வேறு நகைக்கிறான் .
.................................................................................................................................................
"வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என்னுடல்
பாரம் அன்று; பகையன்று: பண்பு ஒழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ."

விளக்கம் :
இது வீரம் அல்ல . விதியும் அல்ல .நீதியும் அல்ல .உன்னுடைய ராஜ்யதுக்கோ / உனக்கோ நான் பகைவனும் அல்ல .பிறகு ஏன் பண்பு இல்லாமல் ( மறைந்திருந்து ) , ஈரம் இல்லாமல் என்னை கொன்றாய்?
...................................................................................................................................................

"வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே!
தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கு அன்றாமோ?
தாய்மையும் அன்றி நட்பும் தர்மமும் தழுவி நின்றாய்."

.
இது எளிதில் புரிய கூடிய வரிகள் . விளக்கம் தேவை இல்லை .
எவ்வளவு தைரியமாக அநீதியை தட்டி கேட்கிறான் பாருங்கள்

..........................................................................

வால்மீகி இராமாயணத்தில் வாலி இவ்வாறு பேசும் போது ராமன் நீ ஒரு குரங்கு , இது அவதார நோக்கம் என்றெல்லாம் சப்பைகட்டுகிறான் .

ஆனால் கம்ப இராமாயணத்தில் ராமன் அமைதியாக இருப்பான் ( கம்பன் இருக்க வைத்திருப்பான் )

இலக்குவன் தான் வாலியிடம் பேசுவான் " என் அண்ணன் உன் தம்பிக்கு வாக்கு கொடுத்து விட்டான் . அதனால் இது தவிர்க்க முடியாமல் போனது " என்றெல்லாம் சொல்லி சமதானப் படுத்துவான் .
வாலி கடைசியில் ராமனை மன்னித்து இறப்பான் . தன் மகனையும் அவனிடம் ஒப்படைப்பான் .

பிறகு இன்னொரு நாளில் கம்பனொடு வருகிறேன் ...

நாள் : 24-Aug-14, 4:17 pm

மேலே