கடவுளும் கந்தசாமியும் ஆதியில் கடவுள் கல்லாயுதம் வைத்திருந்தார் அடுத்து...
கடவுளும் கந்தசாமியும்
ஆதியில்
கடவுள்
கல்லாயுதம் வைத்திருந்தார்
அடுத்து அவர்
அரிவாள் கம்பு பிடித்திருந்தார்
சங்கு சக்கரம்
வைத்த கையில்
துப்பாக்கியும் வந்தது
கணங்கள்
தாண்டிவந்த
கடவுள் கணேசன்
இப்போது
தாங்குவதோ கணிணி
மாற்றங்களை உள்வாங்கி
மறையாமல் வாழ்வதால்
கடவுளும்
நம்ம கந்தசாமியும்
ஒன்றே .
சுசீந்திரன்.