சில்வண்டு சத்தமும் அலையோசை மர அசைவும் மனதில் ஒலிக்குது...
சில்வண்டு சத்தமும்
அலையோசை மர அசைவும்
மனதில் ஒலிக்குது
மறந்துபோன கிராமத்தின்
மன்வாசனைகள் மனத்தில் இனிக்குது
நகரத்தில் வாகன ஓசை
நரகத்தின் நாதமாய் ஒலிக்குது
இம்மண்ணில் நாகரிகத்தை
சீர் குலைக்குது
வளர்த்துவரும் விஞ்ஞானம்
மனித இனத்தை அழிக்குது
அறியாமலே மழலையாட்டம்
மனித இனங்கள் சிரிக்குது
சத்து இழந்து சக்கைகளை சுவைக்குது
சத்துள்ள உணவுகளை மறக்குது
சக்தியில்லா மனிதனே
சாதனை புரிய சக்தி அவசியம்
சக்தியில்லா உணவை
விரைந்து ருசித்து
விரைந்து வாழ்வை முடிக்குது !
சிந்தியுங்கள் இம்மண்ணில்
பிறந்தது வாழவா ?அல்லது விழவா ?