எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முகநூலில் படித்தது கீழே கொடுக்கப்பட்டது தவிர,வேறு ஏதேனும் கூடுதல்...

முகநூலில் படித்தது
கீழே கொடுக்கப்பட்டது தவிர,வேறு ஏதேனும் கூடுதல் தகவல் அறிந்தவர்கள் சுட்டவும்...

பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்
=======================================
தமிழர் சங்கமம் வழங்கும்

இ ஃது ஒரு கவிக்காலம் - உலகளாவியக் கவிதைப்போட்டி

உலகளவில் பரவிக்கிடக்கும் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்காகவும் அதன் மூலம் நல்லதொரு படைப்புகளைத் தமிழ் உணர்வாளர்களுக்கு விருந்துப் படைபதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் சங்கமம் உலகளாவியக் கவிதைப்போட்டியை நடத்தி வருகிறது . கவிஞர்கள் அனைவரும் இதில் பங்குகொண்டு நல்லதொரு படைப்புகளைத் தர வேண்டுகிறோம் .

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் kavithai.dutas@gmail.com

2014 ஆம் ஆண்டுக்கான போட்டி விபரங்கள்

விருப்புத்தலைப்பில் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி : 25.09.2014

முதல் சுற்று

விருப்புத் தலைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி : 23.10.2014
தலைப்பு : 25.10.2014 அன்று அறிவிக்கப்படும்

இரண்டம் சுற்று

முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி : 27.11.2014
தலைப்பு : 29.11.2014 அன்று அறிவிக்கப்படும்

இறுதிச் சுற்று

இரண்டாம் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி : 31.12.2014
தலைப்பு : 25.10.2014 அன்று அறிவிக்கப்படும்

முடிவு அறிவிப்பு மற்றும் பரிசு வழங்குதல்

பொங்கல் திருநாள் அன்று
இறுதிச் சுற்றில் பங்குபெற்ற 10 படைப்பாளிகளிலிருந்து மூவர் மட்டுமே தேர்ந்தேடுக்கப்படுவார்கள்

முதல் பரிசு : 4 கிராம் தங்கக் காசுகள்

வழங்குபவர் : எக்ஸலன்ட் முருகேஷ் - டாக்டர் சுமதி தம்பதியினர்
நிறுவனர், தமிழர் சங்கமம்

இரண்டாம் பரிசு : 2 கிராம் தங்கக் காசுகள்

வழங்குபவர் : அட்மின் கமிட்டி உறுப்பினர்கள்
தொழிற்பிரிவு, தமிழர் சங்கமம்

மூன்றாம் பரிசு : 1 கிராம் தங்கக் காசு

வழங்குபவர் : கவித்திலகம் கவியன்பன் கலாம்
கலை இலக்கியப் பிரிவு செயலாளர் , தமிழர் சங்கமம்

அன்புடன்
கவியன்பன் கலாம்
கலை இலக்கியப் பிரிவுச் செயலாளர்
துபாய்த் தமிழர் சங்கமம்

பதிவு : சர் நா
நாள் : 1-Sep-14, 7:28 pm

மேலே