எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அந்தாதி வடிவ கவிதையொன்று பாடலாக ......... எனக்கு மிகவும்...

அந்தாதி வடிவ கவிதையொன்று பாடலாக .........
எனக்கு மிகவும் பிடித்தது .... நான் எழுத ஆசைப்படுவதும் இதுமாதிரி அந்தாதிக் கவிதைகள் தான்! ..... அழகாய் மென்மையாய் ஒரு காதல்..... வாவ்.....! சினேகா காலையிலேயே நெஞ்சின் அடிஆழத்தை துளைத்தெடுக்கிறாள்...... அழகழகாய் கலர்கலராய் புடவைகள் சிக்கென்ற இடையும் சில்லென்ற உடையும் மனதை விட்டு நீங்க மறுக்கிறது... இவ்வாழ்க்கை திரைக்கு மட்டும் தான் சாத்தியமா....? கேள்வி கேட்கத் தூண்டுகிறது....? பாடலாசிரியர் "யுகபாரதி"க்கு ஒரு கிரேட் வணக்கம்!

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே
மொத்தத்திலே மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே
முத்தத்திலே ஆசையில்லை. சத்தமில்லா வெட்கத்திலே
வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே!

நீ பேசியும், நான் பேசியும் தீராதம்மா பொழுதுகள்
பொழுதுகள் தீரலாம். மாறாதென்றும் இனிமைகள்
இனிமைகள் முளைத்தன ஆதாம்-ஏவாள் தனிமையில்!
தனிமையில் இருவரும் பேசும் மௌனம் இள வெயில்!
வெயில் சாரலடிக்கும். மழை கூடி அணைக்கும்!
அணைக்கும் ஆசை ஆயிரம். அழைக்கும் பாஷை பா சுரம்!
சுரம் ஏழிலும், சுவை ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே!

(நெஞ்சத்திலே)

வா என்பதும், போ என்பதும் காதல் மொழியில் ஒருபொருள்!
ஒரு பொருள் தருவதோ, நீயும் நானும் மறை பொருள்!
பொருள் வரும். புகழ் வரும். ஆனால் வாழ்வில் எது சுகம்?
சுகம் தரும். சுவை தரும். காதல் போல எது வரும்?
வரும் வாழ்க்கை தயங்கும். நமைப் பார்த்து மயங்கும்!
மயங்கும் மாலைச் சூரியன். கிறங்கும் நாளும் ஐம்புலன்!
புலன் ஐந்திலும், திசை நான்கிலும் தேடும் இன்பம் நெஞ்சத்திலே!!

(நெஞ்சத்திலே)

பாடல்: நெஞ்சத்திலே நெஞ்சத்திலே

இசை: வித்யாசாகர்

படம்:பிரிவோம் சந்திப்போம்

பாடலாசிரியர்: யுகபாரதி

பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், ஜெயராம்

பதிவு : சஹானா தாஸ்
நாள் : 2-Sep-14, 8:28 am

மேலே