சித்ராங்கதா

(Tamil Nool / Book Vimarsanam)

சித்ராங்கதா

சித்ராங்கதா விமர்சனம். Tamil Books Review
ஆந்திராவைச் சேர்ந்த பணக்கார வாலிபனான ஜிஷ்ணுவிற்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சரயுவிற்கும் இடையில் தோன்றும் நட்பு காதலாக மாறுகின்றது. அக் காதல் திருமணத்தில் முடிகின்றதா? இல்லை காதலாகவே மடிந்து விடுகிறதா என்பதை நாவலை படிப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக நம் நாயகன் நாயகியின் குணாதிசயங்களை தெரிந்து கொள்வோமா??
நாயகன் ஜிஷ்ணு அழகில் மாயக் கண்ணனுக்கு நிகர். படிப்பில் அவ்வளவு மோசம் கிடையாது. ஆனால் அதற்காக அவ்வளவு கெட்டிக்காரனும் கிடையாது. ஏதோ நம்மைப் போல சுமார் ரகம் தான். பணத்தில் குபேரனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் தான். எவ்வளவு பணம் இருந்து என்ன , உண்மையான பாசம் கொண்ட உறவுகள் இல்லாமல் போனது அவனது துரதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் .அத்தனை துரதிஷ்டத்திலும் அவன் மேல் கள்ளம் கபடமற்ற அன்பை பொழியும் நாயகி சரயுவின் நட்பு அவனுக்கு கிடைத்த நல் வைரம். குறும்பும் குழப்படியும் நிறைந்த சரயுவோ அன்பை பொழிவதில் உமையம்மைக்கு நிகர். கல்வியில் சரஸ்வதியின் மறுபதிப்பு. ஆனால் ஏனோ லட்சுமி அவள் புறம் தன் கருணையை கொஞ்சமே கொஞ்சம் தான் காட்டியிருந்தாள். ஆ.....சொல்ல மறந்துவிட்டேனே; அழகில் நம் நாயகி ரோஜா இனம்.

சேர்த்தவர் : துளசி
நாள் : 18-Jul-16, 6:02 pm

சித்ராங்கதா தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே