சந்தனச்சருகுகள்
(Tamil Nool / Book Vimarsanam)
சந்தனச்சருகுகள் விமர்சனம். Tamil Books Review
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறப்பான ஒரு கவிதை நூல் படித்தேன். இப்படியும் கவிதை இருக்குமா என ஆச்சரியப்பட்டு போனேன். அப்படி ஒரு ஆனந்தம். 200 பக்கங்கள் எங்கு வாசித்தாலும் சிறப்பான வரிகள். அழிந்து போன குமரிக் கண்டத்து கதை , அங்கிருந்த காதல், இயற்கை அழிவுகள், மலைகள், ஆறுகள், சடங்கு முறை என திட்டம் தீட்டி கவிதையால் வெளுத்துக் கட்டி இருக்கிறார் கவிஞர். அவரது கைக்கு ஆயிரம் முத்தங்கள் வைத்தாக வேண்டும். இப்படிப் பட்டவர்களை சினிமா கண்டு கொள்ளாததுதால் தான் நிலைத்து நிற்க கூடிய அளவிற்கும் தரத்திற்கும் பாடல்கள் உருவாகாமல் போய்க் கொண்டிருக்கின்றன. எந்த வரியை உதாரணம் காட்ட என்றே தோன்றவில்லை. வேற லெவல் கவிதை இது. இந்த கவிதைப் புத்தகத்தை வாசித்து விட்டு வேறு எந்த கவிதைகளை வாசித்தாலும் ருசி இருக்காது. இந்த அனுபவத்தை வாசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். உயிர் பிரிவதற்குள் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டும் என்ற எண்ணம் யாவருக்கும் வந்து போவது உறுதி . இந்த நூல் தேவை எனில் 04424960231, 43357328 அழைத்து வாங்கலாம். -
- கவிதை விரும்பி சரவணன், திண்டுக்கல் மாவட்டம்