சுகந்தி சுப்ரபாரதிமணியன்
(Tamil Nool / Book Vimarsanam)
சுகந்தி சுப்ரபாரதிமணியன் விமர்சனம். Tamil Books Review
சுகந்தி சுப்ரபாரதிமணியன் எனும் இவர் தனது கவிதைகள் எல்லாவற்றிலும் புதுமையான உத்தியை பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு வரியிலும் முற்றுப் புள்ளிகள்.ஆனால் பொருண்மைகள் நீண்ட நெடிய பயணத்தோடு, வாசகன் எவ்வளவு தூரம் இழுத்தாலும் நீண்டுகொண்டே போகும் பிரபஞ்சத்தின் எல்லைகளாய். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு அர்த்தங்கள் சொல்லும் கம்பன் கவியின் ஒரு துளியாய் இவருடைய கவிதைகள் உள்ளன எனலாம். நுட்பமான பொருண்மைகளைத் துயரங்களை இக்கவிஞர் எளிய நடையில் விரிவாக விளக்க வேண்டிய பலவற்றையும் உட்பொருளாக உள்ளே வைத்து விளக்கியுள்ளமை பாராட்டுக்குரியது குழந்தை பருவம் முதற்கொண்டு கிழவிப் பருவம் வரை ஒரு பெண் மேற்கொள்ளும் செயல்களை வரிசைப்படுத்திக் கொண்டே வந்தவர்,பெண் என்பவள் தொடர் கதையாக நீண்டு கொண்டே இருப்பாள் என்பதை இவரது கவிதைகளில் எளிமையாகப் படைத்துக் காட்டியுள்ளார்.