சேர்த்தவர் : Drvr Sathis Kumar s, 11-Apr-17, 10:02 pm
Close (X)

அம்மா இருந்திருந்தால் பெண்ணை அடித்திருக்குமா காவல்துறை

அம்மா இருந்திருந்தால் பெண்ணை அடித்திருக்குமா காவல்துறை மனு | Petition

தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.அந்த போராட்டத்தை கலைக்கும் பொருட்டு திரு.பாண்டியராஜன் ADSP அவர்கள் ஒரு பெண்மணியை நாக்கை துருத்தி கொண்டு கடுங்கோபத்துடன் அவருடைய முழு பலத்தையும் பிரயோகித்து கன்னத்தில் அறைந்த காட்சியை செய்தி சேனல்களில் கண்டு நான் ஆற்றொணா துயரமடைந்தேன்.மதுவுக்கு அடிமையாகி பாதிக்க பட்டு உயிரிழக்கும் கணவனால் பாதிக்க பட்ட பெண்களின் கதறல் மற்றும் விதவையாகிற சூழல்,இளம் விதவையாகி சமுதாயத்தில் வாழும் நிலை,இளம் வயதில் பிள்ளைகள் திருடர்களாக ஆகும் சூழல்,குழந்தை தொழிலாளர்கள் நிலை,பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை,கூலிப்படை, குடித்துவிட்டு வாகனம் ஒட்டி ஏற்படுத்தப்படும் உயிரிழப்புகள்,இவையாவும் ஏற்பட மிக முக்கிய காரணம் மது அதை அரசு மளிகை கடைகள் போல் திறந்து வைத்து நடத்தியது. அதில் அதிகமாக வாழ்வை இழக்கும் பெண்கள் அவர்களின் உணர்வுகள் தான் இந்த போராட்டம் இதை கூட நடத்தவிடாமல் மூர்க்கத்தனமாக காவல்துறை நடப்பது கேவலம் சமூக அவலம். அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் அவரின் நேரடி பார்வையில் இயக்கம் காவல்துறை இது போல் ஒரு பெண்ணை தாக்க முற்பட்டிருப்பார்களா. அம்மா அவர்கள் பெண்களில் காவல் தெய்வமாகவும், ஆணாதிக்க உலகில் ஆட்சி செய்து பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். அம்மா அவர்கள் ஆட்சியில் அவர்கள் இருக்கும் போது அனைவருக்கும் பாதுகாப்பு இருந்தது.சமூக சேவையை செய்யும் நான் கூட பெருமிதத்துடன் பல ஆலோசனைகள் வழங்கி நிறைவேற்றியிருக்கிறேன். அடித்த அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் மேலும் அடித்ததற்கான காரணத்தை கூற வேண்டும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 1 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

அம்மா இருந்திருந்தால் பெண்ணை அடித்திருக்குமா காவல்துறை மனு | Petition at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே