விடியலை நோக்கி
விடியலை நோக்கி
இலங்கைத்தமிழ் நண்பனோ
இழக்கவே பிறந்தானோ?
எமக்கெல்லாம் தீவாளி
பட்டாசு வெடியோடு
உனக்கங்கோ தீவாளி
அதிர்வேட்டு சிதைவோடு
எமக்கெல்லாம் தைப்பொங்கல்
செங்கதிரோன் சிவப்போடு
உனக்கங்கோ தைப்பொங்கல்
செங்குருதிச் சிவப்போடு
தமிழாண்டின் முதல்மாதம்
எமக்கெல்லாம் சித்திரை
சவங்களுக் கிடையுள்ள
உனக்கில்லை நித்திரை
கதிர்காமக் கந்தனோ
நார்வேயின் கர்த்தரோ
முன்னவன் அருளாலோ
பின்னவர் துணையாலோ
வேண்டுவதும் ஒன்றேதான்
விரும்புவதும் ஒன்றேதான்
மாயனத் தமைதியல்ல
மனத்தகத்தின் அமைதியாம்