புகை நமக்குப் பகை

புகை - இழுக்க இழுக்க இறுதிவரை

இன்பம் தான் !!! - அதுவே

புகை இழுப்பவரின் வாழ்வினை

இழுத்து விட்டால் ???

பற்ற வைக்கும் ஒவ்வோர்

சிகரெட்டும் – சுற்றியிருக்கும்

ஒவ்வோர் உற்றவருக்கும் -

உயிருடன் வைக்கும் நெருப்பு !!!

புகையிலையின் துணை நாடினால்

பொசுக்கி விடுமே நெஞ்சுக் கூடு தனையும் !!!

புகையின் பகை அறிந்தால் - காத்திடலாம்

பொன்னான வாழ்வுகளை புவனத்திலே !!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (22-Apr-13, 3:38 pm)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 184

மேலே