கடவுள் பாதி,மிருகம் பாதி...!!!!

கடவுளின் நினைப்பு
நாம் படைத்த மிருகமே மனிதன்,
ஆனால் தெளிந்த உண்மை
மனித மிருகம் படைத்த
ஒன்றே கடவுள்..!!

வெளி உலகம் பார்ப்பதற்கு
கடவுளாய் திரியும் மனிதன்
சூழ்நிலையில் மிருகமாகிறான்,
மிருகமாகி தன்னை இழக்கிறான்..!!

அறிவார்ந்த சிந்தனையும்,
ஆழ்ந்த தியானமும் கொண்டு
தினம் தன்னை வளர்த்து
மனிதன் கடவுளாக மாறும் நேரமே,
ஆசையெனும் போதையில் சிக்கி
மிருகமாகிறான்..!!

ஊருக்கு அறிவுரை சொல்லும்
நல்ல மனிதன் தான்,
தெரு ஓரத்தில் உயிர் நோக துடிக்கும்
மனிதனை காக்க அஞ்சுகிறான்,
காரணம் கேட்டால்
பிரச்சனைகளை புறம் தள்ளுகிறேன் என்பான்.!!

உதவி செய்ய வேண்டும் என
பாதி கடவுளாய் சிந்தித்து,
உதவி செய்ய துணிகிற நொடியில்
நமக்கு ஏன் வேண்டாத வேலை என
மீதி மிருகமாய் விலகி விடுகிறான்..!!!

ஒரு உதவி செய்து விட்டு
கடவுள் போல தன்னை எண்ணி
சாகும் வரை பெருமை கொள்ளும் மனிதா,
உன்னுள் பாதி கடவுள் இருக்கும் வரை
சாகா மிருகமும் உன்னுள்ளே இருக்கும்..!!

உன் பாதி கடவுள் குணம் எண்ணி
பெருமை கொள்ளாமல்,
முழு மனித குணம் எதுவென தேடினால்
பாதி மிருகமும் உன்னை விட்டு ஓடலாம்
இல்லை பாதி கடவுள் ஓடி விடுவான்..!!

கால் பங்கு மனித குணம்
இருந்தால் போதும்,
அந்த கடவுளின் பாதி குணம்
கூட வேண்டாம்..!!!

எழுதியவர் : மனோ ரெட் (27-Jul-13, 11:43 am)
பார்வை : 158

மேலே