விருதுகள்-2013 பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013

தோழர்களே...

வணக்கம் ..

ஒரு படைப்பாளி ,
அவன் சார்ந்த சமூகத்தின் கண்ணாடி.
தூய்மை செய்யும் துப்புரவாளி...
சினங்கொண்டு எழும் சீர்கேடழிக்கும் போராளி...
எல்லாவற்றிக்கும் மேலாக சரி என்பதை சார்ந்து நின்று சான்றுகளோடு தவறுகளை சுட்டிக்காட்டி அழித்தொழிக்கும் ஆயுதம் கொண்ட அவதாரம்...

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் சமூக நீதிக்கு அரும்பணி ஆற்றிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இல்லையெனில் தமிழனின் நிலை இன்றுள்ள நிலையை விட மோசமாகி இருந்திருக்கும்...பெண்களுக்கு சொத்துரிமை எனும் ஆயுட்கால அருமருந்தை போராடி பெற்று அளித்து சென்றவர் அவர் எனவே அவரும் ஒரு படைப்பாளியே...!!!

தேர்தல் அரசியலை விரும்பாதவர் பெரியார்...அரசியலில் பங்கு ஏற்க விரும்பாதவர்.: மறுத்தவர் என்றாலும் அவரில்லாமல் தமிழகத்தில் ஓர் அரசியல் இருந்திருக்க இயலவில்லை...தமிழர் கலாச்சார விழுமியங்களில் மூடத்தன மடமைகளை வெளிக்கொணர்ந்து பகுத்தறிவு பாடம் புகட்டியவர்...அவர் கோட்பாடுகள் மூலம் இறைமையை மையப்படுத்திய மூடத்தனங்களை அழிக்க பல நிலைகளிலும் பாடுபட்டார்.

முக்கியமாக தமிழ் இலக்கிய மரபின் மூலமாகவும்
கற்பனை செய்திகள் வழியாகவும் பழக்கவழக்கங்கள் எனும் போர்வையிலும் தமிழர் சமுதாயம் மூட நம்பிக்கைகளில் மூழ்கி அவதியுறும் நிலை மாறிட படைப்பாளிகள் எழுத்தைப் பயன்படுத்தி குமுகாய
தொண்டாற்றுவதும் ஒரு படைப்பாளியின் பணியாகும்.

இந்நிலையில் நமது தளத்தில் பகுத்தறிவு ஆக்க வரிகளை இந்த தமிழ் சமூகத்திற்கு தனது படைப்பு மற்றும் கருத்துக்களால் அளித்து வரும் இவர் 2014ஆன் ஆண்டின் முதல் விருது என "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " எனும் விருது பெரிகிறார்.

யார் அவர் ?
*******************************************************************
$$$$$ "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " $$$$


எனும் விருது பெறும்

@@@@@ தோழர் .முனைவர் வா. நேரு @@@@@

அவர்களை வாழ்த்துவோம் வாரீர் !!!

*********************************************************************..




...:

எழுதியவர் : அகன் (19-Dec-13, 8:16 am)
பார்வை : 188

மேலே