சர்வம்

மழை பெய்த பின்னிரவொன்றில்
நீ ஒரு யட்சியாகவே மாறிவிட்டிருந்தாய்..
மருதுவின் கோட்டோவியம் போல்
என் உடலெங்கும்
உன் நகக் கீறல்கள்.

உன் உஷ்ணப் பெருமூச்சுகளில்
எரிந்துக் கொண்டிருந்தேன்.
பெண்மையின்
பிரபஞ்ச தாகத்தில்
ஓர் சிறு துளி பஸ்பமாகிவிடும் எனினும்
மூர்க்கத்தனமான
ஒரு முத்தத்தில்
இதழ் வழி
என்னை உறிஞ்சிக் கொண்டிருந்தாய்.

இறுக்கி அணைத்தபடி
என்னுயிரை
உன்னுள் கிரகிக்கத் தொடங்கினாய்..
உடலின் எடையிழந்து
அமர நிலையடைந்திருந்தேன்..
உன்னுடலில் நானும்
சில நிமிடங்கள்
உயிர்க் கொண்டிருந்தேன்..

நடுங்கிய உன் மென்னுடலிலிருந்து
என்னுயிரை
மீண்டும் என்னுடல் மேல்
பாய்ச்சினாய்..
உயிரின் பிசுப்பிசுப்புடன்
என் உடல் மேல்
அப்பிக்கொண்டேன்..

உன் பிடி தளர்ந்து
நான் கண்விழிக்கையில்
ஒரு குழந்தையாகி
உறங்கிக் கொண்டிருந்தாய்..

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (22-Apr-14, 6:55 pm)
Tanglish : sarvam
பார்வை : 1027

மேலே