காத்திருக்கிறேன் கண்களின் கட்டளைக்காக

எனது பின்தொடர்தலும் பார்வைகளும்
அவளுக்கு துன்பமென்பதை
அவள் முகத்தின் குறிப்பால் உணர்ந்தவன்
விலகி நடக்கிறேன்…

இந்த விலகளில் அவள் மகிழ்ந்து
என்னைவிட்டு விலகியே நின்றால்
அந்த மகிழ்ச்சியை அவளுக்கு நிலையாக்குவேன்.

எனது விலகலில் விருப்பம் இல்லையென்றால்
ஏதாவதவொரு புன்னகையை என்முன்வீசி
இமைகளால் என்னை ஈர்த்து
இன்பக்கிடங்கில் ஆழ்த்தட்டும்.

காத்திருக்கிறேன் அவளின்
கண்களின் கட்டளைக்காக...


Close (X)

3 (3)
  

மேலே