மழை

கருநிற முகில்கள் கூடிக்
காற்றுடன் பேச்சு வார்த்தை
ஒருமுறை நடத்தும் போது
ஊரெலாம் நனைந்து கொள்ளும்
திருமுகம் வாடி நின்றுத்
திணறிய தாவர மெல்லாம்
உருவினிற் படிந்த அழுக்கை
உதறியே அழகு பூக்கும்
*
தெருவினிற் படுத்து றங்கும்
திமிருள நாய்கள் தானும்
ஒருமுறைக் குளித்து மினுக்கி
உடம்புளச் சூட்டைத் தணிக்கும்
எருமையில் மீது மழைபோல்
என்கிற பழமொழி கொண்ட
கருத்தினை வலுப்ப டுத்தும்
காட்சிகள் கண்முன் தோன்றும்
*
அரும்பெனச் சிரிக்கும் பிள்ளை
அழகியக் கப்பல் செய்து
விரும்பிய வண்ணம் நீரில்
விளையா டிமகிழ் வதற்கும்
குருவிகள் கூட்டில் நின்று
குதூகலம் கொள்வ தற்கும்
கரும்பென பெய்யும் மழையே
காரண மிக மன்றோ!
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-May-24, 1:54 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : mazhai
பார்வை : 66

மேலே