பிறழ் வெளி

பிறழ் வெளி...

நகந்தின்ற
நாவுகளின்
சுவைகூடி
நிற்கிறது
வெளிகளெங்கும்
வியாபித்த
இருள்
புதைக்கிறது
உன்னை
பார்வைகளின்
தொலைவுகளுக்கப்பால்
நாய்கள்
குரைக்கின்றன
ஜாமங்களைக்
கடந்து
கோழிகள்
புணர்கின்றன
மினுமினுப்பிற்காய்
கலைந்து
விழி பிதுங்கி
திற்கிறாய்
தாட்சணயமின்றி
கைகள் புதைந்த
சேற்றில்
ஓவியம் வரைகிறாய்
கொளுத்தப்பட்ட
ஓவியங்களின்
வெளிச்சத்தில்
உன் முகம்
அகோரமாகிறது
வெளிகளின்
பிறழ்வில்
குப்பைகளை
வாரிக் கொண்டிருக்கிறாய்....

மு.கிருஷ்ணகுமார்

எழுதியவர் : மு. கிருஷ்ணகுமார் (17-Jan-17, 2:16 pm)
சேர்த்தது : kanchi krishnakumar
Tanglish : pirazh veLi
பார்வை : 61

மேலே