இருண்ட வீட்டின் ஒளிவிளக்கு

கழனி எங்கும் நீரைப் பாய்த்து
ஏரைப் பிடித்துச் சேற்றைக் குழைத்து
விதைகள் விதைத்து முளைத்திடக் காத்திருப்பான்...

துளிர்விடும் நேரத்தில் தூங்காது விழித்து
வளர்ந்த நாற்றுகளைப் பறித்து மீண்டும்
வயலில் நட்டு வளர்வதை இரசித்திடுவான்...

வளரும் பயிறுக்கு இயற்கை உரமிட்டு
பச்சை வண்ண ஆடைகள் சூட்டி
பருவ மங்கையாய் பாதுகாத்து வளர்த்திடுவான்...

விளைந்த நெற்கதிரைக் கைகளால் அறுத்து
களம் சேர்த்து மணிகள் பிரித்து
வறுமையெனும் பிணிக்கு மருந்தாய்த் தந்திடுவான்...

சுருண்ட வயிற்றின் பசிதனைத் தீர்த்து
உலகினைப் பார்க்குமிந்த விவசாயின் விழிகளே
இருண்ட வீட்டின் ஒளி விளக்குகள்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 11:35 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 542

மேலே