மீண்டும் எழு

தோழா !

துயரை
தூக்கி போடு !

சோகத்தை
சுருட்டி வீசு !

மீண்டு எழு ! -
நீ
மீண்டும் எழு !!

இரத்தமெல்லாம்
சுத்தமாக்கு !

நரம்பெல்லாம்
இறுக்கி முறுக்கு !!

மூளைக்கெல்லாம்
வேலை புகட்டு !!

வெற்று மனத்திற்கு
வெற்றி இலக்கு காட்டு !

தோழா !

புன்னகையுடன்
பூவுலகுக்கு முத்தமிட்டு ...
வெற்றி நோக்கி
வீர நடை போடு !!!

எழுதியவர் : சரவணக்குமார்.சு (1-May-17, 9:42 pm)
சேர்த்தது : சரவணக்குமார் சு
Tanglish : meendum elu
பார்வை : 644

மேலே