பிரியத்தின் துளிகள் - 3

பிரியத்தின் துளிகள்...

துளி #21

நீ மட்டும் எனதானால்
இனி என் பிரார்த்தனைகள்
உலகத்தவருக்காய் மட்டுமே!..

துளி #22

நீயென்ற சொந்தமின்றி
நானென்ற உருவம்
அநாமதேயமாகின்றது...
எனக்கே என்னை
அந்நியமாக்கிவிட்டு
அப்பாலிருந்து
வேடிக்கை பார்க்கிறாய்...
எப்போதன்பே எனைச்சேர்வாய்
அப்போதுதான் இயங்கும்
என் அகிலம் இயல்பாய்!..

துளி #23

அவன் நினைவுகளோடே
கண்மூடிக்கொள்கிறேன்...
துயிலெழுப்ப அவன்
வரும் வரையில்
களையப்போவதில்லை
என் தூக்கம்..!

துளி #24

நீ...
அமைதியாய்
காதலிக்கிறாய்..!
நான்...
அதிரடியாய்
காதலிக்கிறேன்..!
காதலின்
இலக்கணத்தில்
இரண்டுமே
தனிவித
அழகுதான்
அன்பே!..


துளி #25

உனக்கென நான்
பரிசளித்த கடிகாரம்
அதில் எனக்கான நேரத்தை
காட்டுவதெப்போது அன்பே?!

துளி #26

என் இதயத்தை
உன் மௌனங்களால்
உரசிப் பார்க்காதே...
நீ தந்த நினைவுகளோடு
மோதுண்டு அவை
இரத்தம் பிரசவிக்கின்றன
என் இதயச் சுவர்களில்!..

துளி #27

தொலை தூர நிலவும்
நான் தொடும் தூரம்...
நான் தொட நினைக்கும்
நீயோ தொலை தூரம்..!

துளி #28

சிறைவாசம் செய்யவே
விரும்புகிறேன்...
நான் சிறக்கும் இடம்
வேறுண்டோ - உன்
இதயச் சிறையின்றி..!

துளி #29

நரை கண்டாலும்
கரை காணாது
உனக்கான - என்
காதல்!..

துளி #30

என் உயிா்...
என் உடல்...
என் உறவி...
என் கனவு...
என் நினைவு...
அனைத்திலும் இருக்கிறாய்...
நிஜத்தில் மட்டும்
ஏன் வரமறுக்கிறாய்!!!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 10:59 am)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 33

மேலே