ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

கண்களுக்கு விருந்து
காட்சிப் பெட்டகம்
இயற்கை

உழைக்காத மலருக்கு
வியர்வையா ?
பனித்துளி

பூமியிலிருந்து வானம்
வானத்திலிருந்து பூமி
தண்ணீர் சுற்றுலா மழை

உச்சரிப்பைவிட
உயரந்தது
மௌனம்

ஒழியவேண்டும்
வரங்களுக்கான
தவம்

விரல்களின்றித்
தீண்டியது
தென்றல்

உற்றுக்கேளுங்கள்
பேசும்
மலர்

மரமும் கெட்டது
மனிதனைப் பார்த்து
கல்லானது

ஒரு வீட்டில் ஒரு நாளில்
இத்தனை பாலித்தீன்
நாட்டில் ?

யாருக்கு வாக்களிக்க
தேர்ந்து எடுக்க முடியவில்லை
குழப்பத்தில் மக்கள்

ருசிப்பதில் திகட்டலாம்
ரசிப்பதில் திகட்டுவதில்லை
அழகு

கிடைக்காததற்காக ஏங்குவது
கிடைத்ததை உணராதது
பலரின் வாழ்க்கை

கற்பனைதான்
கல்வெட்டானது
தேவதை

ஏழு வண்ணங்களில்
எண்ணம் கவரும் வில்
வானவில்

பிரிந்து
பின் சந்தித்தால்
சுவை அதிகம்

நேற்றைய நவீனம்
இன்றைய நவீனமன்று
நாட்டு நடப்பு

எழுதியவர் : இரா .இரவி (7-Oct-11, 7:31 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 351

மேலே