அத்தை மகளுக்கு கல்யாணம்..????

அத்தி மர நிழலிலே
அத்தை மக கூட,
ஓடி புடிச்சு விளையாடும் போதே
இவள தான் நீ கட்டணும்ணு
சொல்லி சொல்லி வளத்தாக...!!!
சின்ன வயசுலேயே அவ
என்னைய பாத்துட்டு வெறிச்சு ஓட,
ஒன்னும் புரியாம நான் நிக்க,
அப்போ தெரியல
அதுதான் காதலுன்னு...!!
ஒருநாள் கோடை மழை கோவத்துல
கொட்டி தீக்க,
பயந்துபோய் அவ என்னைய
கட்டிபுடிக்க,
அறியாத வயசுலேயே
என் சிறு நெஞ்ச அவ ஆட்டி வச்சா...!!
நட்டு வச்ச செடியில சட்டென
ஒத்த பூ பூத்த போல,
அத்தை மக ஒருநாள்
குத்த வைக்க,
ஊரெல்லாம் ஒரே குலவை சத்தம்...!!!
மாமன்மகன் நான் குச்சு கட்ட,
குனிஞ்சு கிட்டே உள்ள வந்தா
என் அத்தை மக..!!!
சும்மாவே சிவப்பான அவ
என்ன பாத்ததும் இன்னும் சிவக்க
வெக்கத்துல நான் நின்னே...!!!
தாய்மாமன் சீர் தான்னு
ஊர் சொல்லி கொண்டாடனும்னு,
வண்டி கட்டி கொண்டுவந்தேன்
தட்டு தட்டா தங்கத்துல சீர்..!!
கொடுத்து வச்சவ அவ தானேன்னு
கன்னத்துல சந்தனம் வைக்க,
நான் மயங்கிப்புட்டேன்...!!!
அப்போது பெரிய மனுசங்க ஆனது
நாங்க மட்டுமில்ல,
எங்க கண்மூடித்தனமான
காதலும் தான்னு யாருக்கும் புரியல...!!
ரொம்ப பாசமா நாங்க
காதலிலே பறந்து
வானத்துல வட்டம் போட்டோம்,..!!
யார் விட்ட சாபமோ..??
வாய்க்கால் சண்டையில
எங்க குடும்பம் பிரிஞ்சு போக,
நாங்க மட்டும் என்ன சொல்ல,
எங்க காதல் மட்டும் நின்னுச்சு
மண்ணுக்குள்ள போன மண் வாசம் போல..!!
யாரோட ஆசையோ இது,,??
நெஞ்சுல இறங்குன இடி மாதிரி,
என் காதுல சொன்னாங்க ஒரு சேதி,
உன் அத்தை மகளுக்கு
கல்யாணமாம்..!!!
ஓடி போய் என் மாமன் கிட்ட,
எங்க காதல் கதை சொல்ல,
அவரோ வாய்க்கால் பிரச்சினைல
இத காது கொடுத்து கேக்கல..!!
என்ன கட்டிகிட்டா,
செத்துடுவேன்னு என் அத்தை சொல்லி வைக்க,
என் நெஞ்சுல நஞ்ச பாய்ச்சி
அவ சொன்னா ஒத்த வார்த்த
என்னைய மறந்துருங்க..??
உன்ன காதலிச்சுருந்தா
சுலபமா நான் மறந்துடுவேன்..!!
உன் கூட நான் வாழ்ந்துகிட்டு இருக்கேனே
எப்படி மறக்க...???
கண்ணீரோட நான் சொன்னே,,
நம்ம காதலை பிரிச்ச வாய்க்காலுக்கு
எங்கே தெரிய போகுது..,,
நான் உன் மேல வச்ச காதலின் ஆழம்...!!!