" கண்ணே கலைமானே " ஒலிக்கும்போது நீ என்னை...
" கண்ணே கலைமானே " ஒலிக்கும்போது நீ என்னை நினைக்கிறாய்.!
"நீ ஒரு காதல் சங்கீதம் " வரும்போது
நான் உன்னை நினைக்கிறேன்.!
"பச்சைக்கிளிகள் தோளோடு " பாடும்போது
நம் பிள்ளைகளை நினைக்கிறோம்.!!
இப்படியாக...
எங்கோ ஒரு நினைவில் ,
ஏதோ ஒரு பேச்சில் ,
நம் இல்லங்களில்
கணநேரமேனும்
நாள்தோறும்
வாழ்ந்துவிட்டுத்தான்
போகிறான்.!
கமலஹாசன்.!!