அரவமற்ற காட்டிற்குள் அடர்ந்து பூத்த மல்லிப் போல் என்...
அரவமற்ற காட்டிற்குள் அடர்ந்து பூத்த மல்லிப் போல்
என் கவிதைகள் இத்தளத்தில் ...
முக்கனிகள் காட்டிற்குள்
மனிதன் தேடுவதோ நாட்டிற்குள்
திருடாத கவிதையை
வருடிவிட யாருமில்லை
குறை சொன்னாலாவது
கவி வாசிக்கப்படுவதெண்ணி
மனம் கொஞ்சும் ...
படைப்பவர்கள் படிப்பதில்லை எனும்
நிதர்சனம் தவிர்த்தால் நன்று !
ஆசான் பிள்ளை மக்கு
காவலர் பிள்ளை திருடன்
என்பதுபோல் படைப்பவன் நிலையும் இன்று !
என் மனஓட்டம் ....கவிதையின் ஆட்டம் இதுவே !