எங்கும் எண்கள்... எதிலும் எண்கள் .... கணித விளையாட்டு...
எங்கும் எண்கள்... எதிலும் எண்கள் ....
கணித விளையாட்டு ...
--------------------------------------------------------------
உன் நண்பனை அழைத்து அவனை 1லிருந்து 9 வரை .எதாவது ஒரு எண்ணை நினைக்க(எழுத )சொல் .
அந்த எண்ணை 2 ஆல் பெருக்க சொல் .
வந்த விடையை 5 யுடன் கூட்ட சொல் .
இப்பொழுது வந்த விடையை 50 ஆல் பெருக்க சொல்.
பெருக்கி வந்த விடையை 1765 உடன் கூட்ட சொல் .
இப்பொழுது வந்த விடையை. உன் நண்பனின்(யாருடைய பிறந்த வருடமாக வேண்டுமானாலும் இருக்கலாம்) பிறந்த வருடத்தை கொண்டு கழிக்க சொல் .
இப்பொழுது இறுதியாக உன் நண்பனுக்கு ஓர் விடை கிடைக்கும் .
அதை பார்த்ததும் ஏதோ ஒரு மூன்றிலக்க எண் என்று உன் நண்பன் எண்ணுவான் ...
அதற்கு பிறகு அவனுக்கு நீ அதை விளக்க வேண்டும் ...
நீ நினைத்த எண் இது தானே என்று முதல் இலக்க எண்ணை சொல்லி ஆச்சரியம் செய்யுங்கள்...
எப்படி என்று கேட்கும் பொழுது
முதல் இலக்க எண் நீ நினைத்த(எழுதிய) எண்
இரண்டாம் மற்றும் மூன்றாம் இலக்க எண்கள் நீ எழுதிய வருடத்திற்கான வயது ...
உதாரணத்திற்கு :
எனக்கு பிடித்த எண் 5.அதையே எழுதி கொள்வோம் .
5*2=10+5=15*50= 750
(+) 1765
______
2515
(-) 1993 (பிறந்த வருடம்)
__________
522 (5 நான் எழுதிய எண், என் அகவை 22)
இதை வாய் மொழியாகவே சொல்லலாமே இதற்கு ஏன் இவ்வளவு பெரிய சூத்திரம் ..
என்று கேட்கிறீர் ...
#சும்மா.....
--------------------------------------------
எண் கணிதம்
-----------------------
இந்த கணித முறையிலும் வலமிருந்து இடம் தான் கணிக்க வேண்டும் . ஆனால் இங்கே எண்கள் நாட்கள் மாதங்கள் வருடங்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் .
உதாரணம் :
2015.12.15
1993.10.14
___________
22 .02.01 (கழிக்கும் பொழுது நாட்கள் முடிந்ததும் மாதத்திற்கும் , பின் மாதத்திலிருந்து வருடத்திற்கும் செல்ல வேண்டும் ).
மேலே பார்த்த உதாரணம் எளிய முறை ஏன் என்றால் .
நாளும் மாதமும் அதற்குள்ளேயே இருக்கிறது (15<-14) (12<-10)
கடன் வாங்கும் முறையை பார்ப்போமா:
----------------------------------------------------------------
நாட்கள் மாதத்திடம் கடன் வாங்க வேண்டும் ...
அப்படி கடன் வாங்கும் பொழுது
1 மாதம் = 30 நாட்கள்
30 நாட்களை ஏற்கனவே இருக்கும் நாட்களுடன் கூட்டிக் கொள்ள வேண்டும் ....
மாதம் வருடத்திடம் கடன் வாங்க வேண்டும்
அப்படி கடன் வாங்கும் பொழுது
1 வருடம் =12 மாதம்
12 மாதத்தை ஏற்கனவே இருக்கும் மாதங்களுடன் கூட்டிக் கொள்ள வேண்டும் ....
உதாரணம் :
2015.10.15
1955.11.30
_____________
59.10.15 (30+15=45-30=15 நாட்கள் ) (12+9=21-11=10 மாதங்கள்) (2014-1955=59 வருடங்கள்)
~ பிரபாவதி வீரமுத்து