எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கணிதத்தில் இந்தியரின் பங்கு ------------------------------------------------ எண்களாகிய கடலில் ஏராளமான...

கணிதத்தில் இந்தியரின் பங்கு 
------------------------------------------------

எண்களாகிய கடலில் ஏராளமான முத்துக்கள் உள்ளன.மூழ்கி முத்தெடுத்தவர் வெகு சிலரே.அவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு முத்துதான் 6174 என்ற எண்.இதைக் கண்டறிந்தவர் இந்தியக் கணிதவியலர் டி. ஆர். கப்ரேக்கர்.  அவரின்  நினைவாக கப்ரேக்கர் மாறிலி (Kaprekar Constant) என அழைக்கப்படுகிறது.

ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளவும்.அதை முதலில் இறங்கு வரிசையில் எழுதவும்.பின்பு ஏறு வரிசையில் எழுதவும். முதல் எண்ணிலிருந்து இரண்டாம் எண்ணைக் கழிக்கவும்.கழித்து வந்த விடையை மீண்டும் இதேபோல இறங்கு வரிசையிலும், ஏறு வரிசையிலும் எழுதி கழித்து விடை காணவும்.இதைத் தொடர்ந்து செய்தால் இறுதியில் 6174 என்ற எண் கிடைக்கும்.

குறிப்பு :அதிகபட்சமாக இரண்டு எண்கள் ஒரே எண்ணாக வரலாம் .


உதாரணமாக 5678 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம் 

5678 ஐ இறங்கு வரிசையில் எழுத--- 8765 
5678 ஐ ஏறு வரிசையில் எழுத------- 5678 
கழித்து வரும் விடை-----------------3087 - -
3087 ஐ இறங்கு வரிசையில் எழுத---8730 
3087 ஐ ஏறு வரிசையில் எழுத-------0378
கழித்து வரும் விடை-----------------8352 
8352 ஐ இறங்கு வரிசையில் எழுத---8532 
8352 ஐ ஏறு வரிசையில் எழுத-------2358 
கழித்து வரும் விடை-----------------6174 
எந்தவொரு எண்ணை எடுத்துக்கொண்டாலும் இந்த முறையில் தொடர்ந்து செய்யும்போது இறுதி விடையாக 6174 என்ற எண்ணே வரும்.



ஏன் 6174-ல் அப்படியே  நிற்கிறது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது ...

6174 ஐ இறங்கு வரிசையில் எழுத -------- 7641
6174 ஐ ஏறு வரிசையில் எழுத ---------------1467
கழித்து வரும் விடை-----------------------------6174 


நாள் : 15-Dec-15, 5:20 am

மேலே