எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல் சமைப்பது எப்படி..? சொல்லி கொடுப்பது பேச்சிலர்.. ஃ...

பொங்கல் சமைப்பது எப்படி..? 


சொல்லி கொடுப்பது பேச்சிலர்.. ஃ செப் ....  இரா.சந்தோஷ் குமார். 

முதல்ல தேவையான அரிசியை எடுத்துக்கனும்.(எந்த அரிசி.. புழங்கல் அரிசியா..? பச்சை அரிசியா..? ன்னு நீங்க கேட்பீங்கன்னு எனக்கு தெரியும்.  உங்க பேரு எழுதினா எந்த அரிசியா இருந்தாலும் எடுத்துக்கோங்க. )
ரைட்.. செகண்ட் ஸ்டெப் என்னான்னா.. 

எடுத்த தேவையான அரிசியை ஒரு முறத்தில கொட்டனும். கொட்டி.. அதுல புழு.. பூச்சி.. தூசி துரும்பு எதாவது இருந்தா எடுத்திடுங்கோ... அப்புறமா..
ஒரு பானையில  தண்ணி ஊத்துங்க. 
( எந்த பானை?  மண் பானையா.. ?  இல்ல.. சில்வர் பானையா.? ந்னு நீங்க கேட்டீங்கன்னா.. நான் சொல்வேன்,  எந்த பானை ஒழகாதோ அந்த பானைன்னு....)
சரி. எடுத்த பானையில.. ஒரு கைப்பிடி அரிசிக்கு இரண்டு  டம்ளர் தண்ணி ஊத்தனும்.. ஊத்தியாச்சா ?


அப்புறமா.. தண்ணி கொதிக்க ஆரம்பிச்ச உடனே.. அரிசியை போடுங்க.. ( பார்த்து கையை உள்ள விடாதீங்க.. வெந்துடும்... )
அப்புறமா.. பாசி பருப்பு கொஞ்சமா போடுங்க.(பாசி பருப்பு எப்படி இருக்குமுன்னு கேட்டா.. நான் சொல்வேன் கூகுள்ல தேடி பாருங்கன்னு. )
அப்புறமா....  தேவையான உப்பு போடனும்..  (அது என்ன தேவையான உப்பு.. தேவையில்லாத உப்புன்னு இருக்கான்னு நீங்க கேட்கபுடாது. மானம் ரோசம் வேணுமுன்னா உப்பு தேவை. இல்லன்னா தேவையில்ல..)

கொஞ்ச நேரம் கழிச்சி.... அதாகப்பட்டது  இரண்டு இளையராஜா பாட்டு கேட்கிற நேரமுன்னு வையுங்க..
ஒரு கரண்டியை எடுத்து.. பானையில இருக்கிற அரிசியை கிண்டி கிளறி விடுங்க.. அப்படியே கரண்டில ஒரு அரிசி பருக்கை எடுத்து ... வாயில வச்சி மென்னு பாருங்க. வெந்துச்சா.. ?வேகலையா.. ? 
சரி.. இன்னும் இரண்டு இளையராஜா பாட்டு கேளுங்க...இப்போ சரியா வெந்திருக்கும். ஆக..அப்படியே பானையில ஒரு தட்டு போட்டு மூடி... தண்ணிய வடிய வையுங்க. 


இது வடியுற நேரத்தில.. தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு காயவும், மிளகு. சீரகம்,முந்திரி,கருவேப்பிலை தாளித்து கொட்டுங்க.. ( கொட்டுங்கன்னா.. கீழ தரையில இல்ல.. அரிசி பொங்கின பானையில... )கொழப்பு கிழப்பு இல்லாதவங்க நெய் தாராளமாக சேர்க்கலாம்.மிளகு சீரகம் அவரவர் விருப்பம்..செலவு அதிகமாச்சின்னா கம்பெனி பொறுப்பு இல்லங்க. 
இப்போ.. தாளிச்ச எல்லாத்தையும்... பொங்கின அரிசி.. பாசிபருப்புடன் போட்டு கிளறி விட்டா.. பொங்கல் ரெடி....

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. பானையில தண்ணியோடு சேர்த்து பாலும் சேர்த்துக்கலாம். ஆவின் பால் தான் சேர்க்கனுமுன்னு இல்ல... ஆரோக்யா பால்.. . சைக்கிள் காரன் விக்கிற பால் எந்த பாலா இருந்தாலும் சேர்த்துக்கலாம். கிரிக்கெட் பால் ,அமலா பால் மட்டும் வேண்டாம். அது போல சக்கரைப் பொங்கல்ன்னா.. அரிசி கூட வெல்லத்தை சேர்க்கனும்.. வெல்லமுங்க .. வெள்ளமில்ல. அச்சு வெல்லம். 

பொறுப்புத் துறப்பு.

இதில் சொல்லப்பட்ட செய்முறைப்படி பொங்கல் செய்து சாப்பிடும் அன்பர்களுக்கு..  ஏதேனும் அபாயம் ஏற்பட்டலோ.. அல்லது விநோதமான செயலுக்கு தூண்டப்பட்டாலோ.... அதற்கு கம்பெனி எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்கா..! 



-இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 17-Jan-16, 11:41 am

மேலே