சுயநலமாக ஒரு எண்ணம் ---------------------------------------------- என் ஊர் விழுப்புரம்...
சுயநலமாக ஒரு எண்ணம்
----------------------------------------------
என் ஊர் விழுப்புரம் மாவட்டத்தில்
திண்டிவனம் வட்டத்தில் உள்ள செண்டூர் கிராமம்...
பசுமையும் வளமையும் நிறைந்த ஊர்...
மயிலம் ஒன்றியமாகும் .
செண்டூர் ஊராட்சியாகும் .
மயிலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமம்...
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்திற்கும் திண்டிவனத்திற்கும் இடையே அமைந்துள்ள கிராமம்...
மயிலத்திற்கும் எங்கள் கிராமத்திற்கும் 3 கிலோ மீட்டர் தான்...
மயிலம் முருகருக்கு எங்கள் ஊர் தாய் வீடு...
ஆடிப் பெருக்கு வந்தால் எங்கள் ஊருக்கு வந்து... ஆற்றில் இறங்கி விட்டு அன்றைய தினம் முழுவதும் எங்கள் ஊரில் தங்கி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அருட்காட்சி தந்திடுவார்...
இரவு 12 மணி வாக்கில் எங்கள் கிராமத்தின் காவல் தெய்வமும்,மயிலம் முருகனின் தாயுமான பாவம் தீர்த்த அம்மனிடம் பிரியாவிடை பெற்று செல்லும் காட்சி மனதில் பசுமரத்தாணி போல் நிற்கும்..
நான் சீரியல் பார்ப்பதில்லை.
ஊரில் சொல்லி கேள்விபட்டேன். சன் டிவியில்
குலதெய்வம் நாடகத்தில் பாவம் தீர்த்த அம்மன் கோவிலை காண்பித்தார்களாம்...
இன்னும் என் ஊரின் சிறப்பு தொடரும்..சொல்ல சொல்ல முடிக்க முடியாத ஒன்றில் எங்கள் கிராமமும் அடக்கம்...
இருந்தும் மனம் சொல்லிவிட முடியாதா என்று ஏங்கும்
-----------------------------------------------------------
எங்கள் ஊரும் அதன் மருவலும்
----------+++++----+-+++-------------------+---
முருகனின் பெயர் கொண்டு செந்தூர் என்றிருந்தது நாளடைவில் மருவி செண்டூர் என்றாகிவிட்டது...