எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதன் முதலாக ஒரு போட்டியொன்றில் நான் பெறும் மிகப்...

முதன் முதலாக ஒரு போட்டியொன்றில்  நான் பெறும் மிகப் பெரிய பரிசு இது.  ஒருபுறம் எழுத்து.காம் 11 ஆம் ஆண்டுவிழா தின மாபெரும் கவிதைப்போட்டி என்பதையும், மறு புறம் எனது பரிசுப் படைப்பின்  மூன்று பத்திகளையும்,  பதித்து வந்த இந்த கோப்பை மனதுக்குள் பலவற்றை கொண்டு வந்து கொடுத்திருக்கிறது.

ஹயாக்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான நம் ”எழுத்து.காம்”தளத்தில் நடத்திய மாபெரும் கவிதைப் போட்டியில் நம் தளம் கொடுத்திருந்த தலைப்புகளில் ஒன்றான  ”மீண்டும் மீண்டும்“ என்ற தலைப்புக்கு உடல், பொருள், ஆவி, குடும்பம் என எல்லாவற்றையும் இழந்து மாண்டு போய் மூவர்ணக் கொடியின் இறுதி யாத்திரைக்குள் மறைந்து போகும் இராணுவ வீரர்களுக்காக நான் எழுதிய படைப்பு சிறப்புப் பரிசு பெற்றது. இந்த படைப்புக்காக தனியான எண்ணம் படைத்த ”வெண்பா சாரலர்”  திரு சங்கரன் அய்யா அவர்களுக்கும், உங்களாலும் பரிசு வாங்க முடியும் என்று என்னை உற்சாகப் படுத்திய எழுத்து தள சகோதர சகோதரியரின் வட்டத்துக்கும், இதை என் அன்புப் பரிசாக சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத்தனை கவிஞர்களுக்கு மத்தியில்  என்னையும் பரிசுக்காக தேர்ந்தெடுத்து எனக்கும் ஒரு அங்கிகாரம் கொடுத்த எழுத்து.காம் நிறுவனத்துக்கும்  என் நன்றிகள் பல.

நாள் : 27-Jan-16, 9:38 am

மேலே