"வேறு நிலாக்களில்....வே ரும் நிலாக்களே" என்று கவித்துவமாக கருத்திட்டிருக்கிறார்...
"வேறு நிலாக்களில்....வேரும் நிலாக்களே"
என்று
கவித்துவமாக கருத்திட்டிருக்கிறார் கவிஜி...!
இந்த மாறுபட்ட நூல் முயற்சியை "சிற்பி, மு.மேத்தா "போன்ற முன்னோடிகள் மனம் உவந்து பாராட்டியிருக்கிறார்கள் .
ஆரவாரமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் தரமான வாசகர் விழிகளில் தவழும் இந்த நிலாக்கள் தமிழ்க் கவிதைப் பிரபஞ்சத்தில்போற்றப்படும். பார்வைகளும், பகிர்வுகளும் குறைந்தே காணப்படினும் அவை யாவும் தரமான, விசாலமான பார்வைகள். அந்த ரசிக விழிகளுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
இது எல்லோரும் எழுதவேண்டிய தொடர் அல்ல. எல்லோரும் படிக்கவேண்டிய தொடர்.
ஊர்வலம் இன்னும்புதிய பரிமாணங்களில் தொடரும். கவிதைத் தேர்வில்இருக்கும் குழு தோழர்களுக்கும். ஆதரவான கரங்கள் நீட்டும் ரசிக நெஞ்சங்களுக்கும் மீண்டும் நன்றி.
வாழ்க தமிழ்..!
வெல்க நற்கவிதைகள் ....!
நேசத்துடன்,
கவித்தாசபாபதி
வேறு நிலாக்களின்ஊர்வல அழகைக் காண விரும்பினால் கீழ்க் காணும்இணைப்பைச் சொடுக்குங்கள்