எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செல்பேசி மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப்-பின் பயன்பாடு அதிகரித்துள்ள...

செல்பேசி மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப்-பின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தற்போது அதில் கூடுதல் வசதிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஆண்டு சந்தா விதிக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனை இனி இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை நூறிலிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வாட்ஸ் அப் பயனாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடக்கத்தில், ஒரு குரூப்பில் அதிகபட்சம் 50 பேர் தான் உறுப்பினராக இருக்க முடியும். இந்த எண்ணிக்கையை 2014 ஆம் ஆண்டில் 100 ஆக உயர்த்தியது வாட்ஸ் அப். தற்போது அந்த எண்ணிக்கை 256 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது

இந்த புதிய வசதி சோதனை அடிப்படையில் உள்ளதால், அனைத்து பயனர்களும் பெற முடியாது. ஆன்ட்ராய்டு செல்பேசியில் இந்த புதிய பதிப்பை நேரடியாக பயன்படுத்த https://www.whatsapp.com/android/current/WhatsApp.apk என்ற முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

முதற்கட்டமாக, ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் செல்பேசிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ள புதிய பதிப்பை, விண்டோஸ், பிளாக்பெர்ரி உள்ளிட்ட செல்பேசிகளுக்கு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் : 5-Feb-16, 5:39 pm

மேலே