சமஸ் காமராஜரின் முதலாவது அமைச்சரவை- 1954 இரண்டாவது அமைச்சரவை-...
சமஸ்
விருதுநகர். வெயில் இந்த ஊரில்தான் இப்படி அடிக்கிறதா அல்லது இந்த ஊரில்தான் இப்படித் தெரிகிறதா என்று தெரியவில்லை. காலையிலேயே சுள்ளென்று விழுந்தது. ஊரில் அன்றைக்கு முழுவதும் சுற்றித் திரிந்தபோது, ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. யார் தலையிலும் துண்டு இல்லை, முக்காடு இல்லை, கையில் குடையில்லை; விருதுநகர்க்காரர்கள் நாளெல்லாம் வெயிலில் நனைந்துகொண்டிருந்தார்கள். இந்த ஊர்வாகும் சேர்ந்துத்தான் காமராஜரின் அலுக்காத உழைப்பில் வெளிப்பட்டிருக்குமோ என்று தோன்றியது.