எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'படிப்பைத் தொடர உதவுங்கள்': கவுசல்யா வேண்டுகோள் கவுசல்யாஉடுமலையில், கலப்பு...

'படிப்பைத் தொடர உதவுங்கள்': கவுசல்யா வேண்டுகோள்  

கவுசல்யா கவுசல்யாஉடுமலையில், கலப்பு திருமணம் செய்துகொண்டதால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கவுசல்யாவிடம், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய ஆய்வாளர் சந்திரபிரபா, கள ஆய்வாளர் லிஸ்டர் ஆகியோர் சுமார் 45 நிமிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்திர பிரபா கூறும்போது, ‘தாக்குதலுக்கு உள்ளான கவுசல்யா நலமுடன் உள்ளார். மேற்கொண்டு படிப்பைத் தொடர உதவுமாறு எங்களிடம் தெரிவித்துள்ளார். இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை இரு தினங்களில் புதுடெல்லியில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம்’ என்றார்.கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின்ஜோ தெரிவித்ததாவது: கவுசல்யாவின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து ள்ளது. தாக்குதலால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவர், அதில் இருந்து மீண்டு வருவதற்காக தகுந்த மருத்துவர்களால் தொடர்ந்து மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.

நாள் : 17-Mar-16, 11:16 pm

மேலே