புகைப்படங்கள் > விழாக்கள் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்சென்னை...
புகைப்படங்கள் > விழாக்கள்கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு பின், இன்று கோலாகலமாய் நடைபெற்றது. பார்வதி தேவி மயில் வடிவில் சிவ பெருமானை வழிபட்ட தலமான மயிலாப்பூர் கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 5:00 மணிக்கு, 12ம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை, 7:45 மணிக்கு, கலசங்கள் புறப்பட்டு, 8:30 முதல், 9:50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கபாலீஸ்வரருக்கு மகாபிஷேகம் காலை, 11:00 மணிக்கு நடைபெற்றது.க்கிறது. மாலை 4:15 மணிக்கு மண்டலாபிஷேகமும், 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனங்களில், பஞ்சமூர்த்தி வீதியுலாவும் இனிதே நடைபெற்றது.