தமிழ். தமிழ். தமிழ். என்று பழம் பெருமை பேசுகிறோம்....
தமிழ். தமிழ். தமிழ். என்று பழம் பெருமை பேசுகிறோம். ஆனால் தமிழில் பேச தயங்குகிறோம். தமிழில் எழுத தெரியவில்லை. வார்த்தைகளை மடக்கி மடக்கி போட்டு கவிதை எங்கிறோம். எழுத்தில் எதுகை இல்லை. மோனை இல்லை. யாப்பு இல்லை. இலக்கணம் இல்லை. வார்த்தைகளை கொட்டி வடிவமைக்கிறோம். இதை எல்லாம் கற்றுத்தர ஆட்கள் இல்லை எங்கிறோம். 8ம் வகுப்பில் கற்பிக்க மறுத்து அதை வாய்ப்பில் விட்டு விடுகிறோம். இதை வீட்டிலும் கண்டுகொள்வதில்லை. மெல்ல தமிழ் இனி சாகும். புரட்சிக்கவி பாரதி அன்றே சொன்னான். ஆம். தமிழ் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது. வீட்டிலும், பள்ளியிலும், ஊடகங்களிலும்.