எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பூக்கள் கதை! மனைவி வேரூர் சென்றிட தோட்டத்தில் பூப்பறிக்க...

 பூக்கள் கதை!


 மனைவி வேரூர் சென்றிட 
 தோட்டத்தில் பூப்பறிக்க 
 காலையில் நானும் சென்றிட்டேன் 
 என்னைக் கண்டு மகிழ்ச்சியுடன் 
 நல்முத்து போன்ற மல்லிகைகள் 
 நான் முன்னர், நான் முன்னரென 
 கண்ணன் கழுத்தை அலங்கரிக்க 
 முகமலர்ந்து போட்டியிட்டு 
 அரசவை நர்த்தகிகள்போல் 
நளினமுடன் ஆடுவது தெரிகிரதே   

 பூக்கள் சிலவற்றை செடியினிலே 
 விட்டு நான் முன்னேற 
 காலையில் எங்கே நாம் தேனிகளுடன் 
 களவுடன் காதல் கொண்டு குலாவுவதை 
 கண்ணன் கண்டிருப்பானோ 
 பறிக்க வந்த இவரிடமும் 
 காதினிலே கூறியிருப்பானோ 
 எம்மை நிராகரித்து செடியினிலேயே 
 வாடி மடியச் செய்திடுவானோ 
 என சோர்ந்து விழுகிரதே   

 பறித்தப் பூக்களும் 
 தாயின் முலைப்பாலுக்கு வேண்டி 
 பசியுடன் பதறும் சிறுகுழந்தைகள் போல 
 நாறினில் கோற்று மாலையாக 
 எனது கண்ணன் கழுத்தினை 
 அலங்கரிக்க விழைகிரதே 
 மாலையும் தொடுத்து 
 கண்ணனுக்கு மேலும் அழகூட்டி 
 வயிறாறு பாலை உண்டு களித்த குழந்தைகள் போல் 
இனிமையுடன் உறங்கிற்றே!   

 சம்பத் குமார்         

பதிவு : sampath kolkata
நாள் : 16-Apr-16, 11:48 am

மேலே