எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓஷோவின் குட்டிக் கதை. ஒரு திருடன் ஒருமுறை அகப்பட்டுக்...

                    ஓஷோவின் குட்டிக் கதை.  


ஒரு திருடன் ஒருமுறை அகப்பட்டுக் கொண்டான். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டான். வழக்கை விசாரித்த நீதிபதிக்கு வியப்பாகிவி்ட்டது. “ நீ அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஓரே இரவில் ஒன்பது தடவை நுழைந்தாயாமே. அது ஏன்? என்று காரணம் கேட்டார்.   “ எஜமான், வேற என்ன செய்யறது? பெரிய கடையாச்சே. நான் ஒண்டியாளே சுற்றி – சுற்றி கொள்ளயடிக்க வேண்டியிருந்தது. ” என்று திருடன் அப்பாவியாகப் பதில் சொன்னான்.   “ ஏன், உனக்கு கூட்டாளி யாரும் கிடைக்கலியா? ”   “ எசமான், காலம் ரொம்ப கெட்டப் போச்சுங்க. யாரை கூட்டாளியா சேத்துக்கிறது? எவனை சேர்த்துக்கிட்டாலும் ஏமாத்தி துரோகம் பண்ணிடுவானுங்க, ஐயா. ” 

ஆதாரம் ; ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 126 
 தகவல் ; ந.க. துறைவன்.  

பதிவு : துறைவன்
நாள் : 18-Aug-17, 8:06 am

மேலே