முயன்றதில் ஒருவர் பயன்பெற அகம் மகிழ்ந்து மரிப்பேன்.. முயன்றும்...
முயன்றதில் ஒருவர் பயன்பெற
அகம் மகிழ்ந்து மரிப்பேன்..
முயன்றும் பலர் துன்புற
மனம் வெறுத்து சாவேன்..!
மரணத்தை வெல்ல
புறமுதுகிடாது
முன்பணிந்து மரிப்பேன்..
மக்களின் இன்னலில்
அகம் கொதித்திட..
அணுஅணுவாய் சாவேன்..!
என் வெற்றியில்
வருவது மரணம்..
என் தோல்வியில்
கொள்வது சாவு..!
நான்...
மரிப்பேனா???
சாவேனா???
..கவிபாரதி..